Saturday, May 29, 2010

இஸ்லாமியத் தொழுகையும் -யோகாசனமும்

எல்லாரும் சொல்கிறார்கள் யோகாசனம்  மிக சிறந்தது? .
யோகாவை உலகமே கொண்டாடுகிறது !!!அப்படி என்ன இருக்கிறது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று .?

நன்கு யோசிக்க வைத்தது என்னை .
தேட தொடங்கினேன் ,எனது P .G Diploma in yoga என்ற முதுகலை பட்டய படிப்பில் -அண்ணாமலை யுனிவர்சிடியில் ஒரு பாடத்தில் இதனை ஆராய்ச்சிக்காக எடுத்து படித்தேன் .நமது இஸ்லாத்தில் இல்லாதது அதில் ஒன்றும் பிரமாதமானதாக எதுவும் இல்லை ...

அந்த ஆராய்ச்சி கட்டுரையினை தொடராக எழுதலாம் என மனம் எண்ணுகிறது .அல்லாஹ் அதற்கான விஷய ஞானத்தை தர தூவா செய்யுங்கள் .

கீழுள்ள இந்த படத்தை பாருங்கள் ..என்ன தெரிகிறது ?.
நமது தொழுகை நிலையில் உள்ளதை தான் அவர்கள் சம்ஸ்க்ருதத்தில் பெயர் வைத்திருக்கிறார்கள் .

  1. இறை அச்சத்துடன் தொழும் தொழுகை -இம்மையிலும் ,மறுமையிலும் நல்ல கூலியை அல்லாஹ்விடம் பெற்று தரும் 
  2. மன ஓர்மையுடன் தொழும் தொழுகை -மன நிம்மதியை தரும் 
  3. தொழுகை நிலைகள் -யோகாவில் உள்ள ஆசனங்களை விட பல மடங்கு சிறந்து .
  4. நபிகள் நாயகம் சொன்ன படி நாம் தொழும் தொழுகை -பல்லாயிரம் ஆசனங்களை விட சிறந்து .


அடுத்து ..அஷ்டாங்க யோகாவும் -நமது இஸ்லாமும் ஒரு ஒப்பீடு 

No comments:

Post a Comment